
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று(23.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 5 ஆவது போட்டியாக துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. இதில் சவுத் ஷகீல் 62(76) ஓட்டங்களையும், மொஹமட் ரிஸ்வான் 46(77) ஓட்டங்களையும், குஷ்தில் ஷா 38(39) ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணி முதலிரு விக்கெட்களையும் இழந்து தடுமாறினர். 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த சவுத் ஷகீல், மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர்.
இந்தியா அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும், ஹார்டிக் பாண்டியா 2 விக்கெட்களையும், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
துடுப்பாட்ட வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | பந் | 4 | 6 |
இமாம் உல் ஹக் | Run Out | Run Out | 10 | 26 | 0 | 0 |
பாபர் அசாம் | பிடி – KL ராகுல் | ஹார்டிக் பாண்டியா | 23 | 26 | 5 | 0 |
சவுத் ஷகீல் | பிடி – அக்ஷர் படேல் | ஹார்டிக் பாண்டியா | 62 | 76 | 5 | 0 |
மொஹமட் ரிஸ்வான் | Bowled | அக்ஷர் படேல் | 46 | 77 | 3 | 0 |
சல்மான் அகா | பிடி – ரவீந்திரா ஜடேஜா | குல்தீப் யாதவ் | 19 | 24 | 0 | 0 |
தய்யப் தஹிர் | Bowled | ரவீந்திரா ஜடேஜா | 04 | 06 | 0 | 0 |
குஷ்தில் ஷா | பிடி – விராத் கோலி | ஹர்ஷித் ராணா | 38 | 39 | 0 | 2 |
ஷஹீன் ஷா அப்ரிடி | L.B.W | குல்தீப் யாதவ் | 00 | 01 | 0 | 0 |
நசீம் ஷா | பிடி – விராத் கோலி | குல்தீப் யாதவ் | 14 | 16 | 1 | 0 |
ஹரிஸ் ரவுப் | Run out | Run Out | 08 | 07 | 0 | 1 |
அப்ரர் அஹமட் | Not Out | Not Out | 00 | 00 | 0 | 0 |
Extras | 17 | |||||
ஓவர் 49.4 | விக்கெட் 10 | மொத்த ஓட்டம் | 241 |
பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓவர் | ஓட்டம் | விக்கெட் | Economy |
மொஹமட் ஷமி | 08 | 00 | 43 | 00 | 5.37 |
ஹர்ஷித் ராணா | 7.4 | 0 | 30 | 01 | 3.91 |
ஹார்டிக் பாண்டியா | 08 | 00 | 31 | 02 | 3.87 |
அக்ஷர் படேல் | 10 | 00 | 49 | 01 | 4.90 |
குல்தீப் யாதவ் | 09 | 00 | 40 | 03 | 4.44 |
ரவீந்திரா ஜடேஜா | 07 | 00 | 40 | 01 | 5.71 |
அணி விபரம்
இந்தியா அணி :- ரோஹித் ஷர்மா(தலைவர்), ஷுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், KL ராகுல், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திரா ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, ஹர்ஷித் ராணா
பாகிஸ்தான் அணி :- இமாம் உல் ஹக், பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான்(தலைவர்), பகர் சமான், சல்மான் அகா, தய்யப் தஹிர், குஷ்தில் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவுப், அப்ரர் அஹமட்