
கனேடிய தமிழர் பேரவையின் உதவியுடன் Made In Mullaitivu எனும் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்புநிலையம், இன்றைய தினம் (24.02) முல்லைத்தீவு புதிய பஸ் நிலையத்தில் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களாலும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த வவுனியா பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் பீடத்தின் பீடாதிபதி யோ.நந்தகோபன் அவர்களாலும் திறந்துவைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வேண்டுகோளுக்கமைய, கனேடிய தமிழர் பேர வையின் நிதியுதவியுடன் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த செயற்றிட்டத்தினூடாக உள்ளூர் உற்பத்திகளை ஊக்கு விப்பதோடு, உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்க முடியும்.
இது வெற்றிபெறும் பட்சத்தில் நிலையான பொருளாதார கட்ட மைப்பொன்றை வடக்கு, கிழக்கில் உருவாக்க முடியும் என நம்பப்படுகின்றது.
இவ் விழாவில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ் தானிகராலய அதிகாரிகள், கனேடிய தமிழர் பேரவையின் பிரதிநிநிகள் மற்றும் இத்திட்டத்துக்கான நன்கொடையாளர்கள், பொதுமக்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.