யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக யால தேசிய பூங்காவின் வீதி அமைப்பிற்கு ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்கும், அதன் மூலம் அதன் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும், மார்ச் முதலாம் திகதி முதல் யால தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனையடுத்து இன்று பிற்பகல் 2:00 மணி முதல் குறித்த வீதிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை , இன்று காலை யால தேசிய பூங்காவில் பெய்யும் மழையைப் பொறுத்து இந்த நிலைமை மாறக்கூடும் என்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.