வவுனியாவில் விரைவில் ஒசுசல மருந்தகம் – சத்தியலிங்கம் எம்.பி

வவுனியாவில் ஒசுசல அரசாங்க மருந்தகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நேற்று (4/3/2025)நடைபெற்ற அமைச்சரவைமட்ட ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தன்னிடம் உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவித்ததாவது

கடந்த 5/2/2025 பாராளுமன்ற அமர்வின் போது வவுனியா மாவட்டத்தில் அரசாங்க மருத்தகம் ஒன்றினை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதனால் குறைந்த விலையில் மக்கள் மருந்துகளை பெறமுடியும் என்றும் கோரிக்கை வைத்திருந்தேன்.

அதனை தொடர்ந்து நாடெங்கிலும் அரசாங்க மருந்தகங்கள் இல்லாத மாவட்டங்களில் ஒசுசல மருந்தகங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சு மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தேன், வவுனியாவில் விரைவில் அரசாங்க மருந்தகம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார் என்று பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version