மன்னார் 542 காலாட்படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு வலயப் பாடசாலை மாணவிகள் பங்கேற்ற கலாச்சார நடன போட்டி நிகழ்வு மன்னார் நகர மண்டபத்தில் நேற்றைய தினம் (08.03) இடம்பெற்றது.
மன்னார் 542 ஆவது பிரிவு காலாட்படை, மேஜர் விக்டர் பெர்னாண்டோ மற்றும் பிரிகேடியர் சந்திக்க அசுருசிங்கவின் ஏற்பாட்டில்,நடைபெற்ற இந்த கலாச்சார நடனப் போட்டியில் 12 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
குறித்த நிகழ்வில் மன்/ புனித சவேரியர் பெண்கள் கல்லூரி மாணவிகள் முதலாம் இடத்தினையும், மன்/டிலாசால் கல்லூரி நானாட்டான் மாணவிகள் இரண்டாம் இடத்தையும்,திருக்கேதீஸ்வரம் மன்/கௌரியம்பாள் தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
முதல் மூன்று இடத்தையும் பெற்றுக் கொண்ட மாணவிகள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள், விருந்தினர்களால், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தின் இரண்டு சிங்கள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளும் பங்கேற்று, கலாச்சார நடனத்தினை வழங்கியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரிகேடியர் ஐ. பி ஜயசிங்க, சிறப்பு விருந்தினர்களாக நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு, சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் வை.சந்திரபால, மேஜர் சிறீநாத் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்