அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியராகப் பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவரை அவரது குடியிருப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (12.03) காலை கல்நேவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என நேற்றைய தினம் (11) அடையாளம் காணப்பட்டதுடன், அவரைக் கண்டுபிடிக்க ஐந்து பொலிஸ் குழுக்களினால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட சகல சுகாதார ஊழியர்களும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான தொழில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது.