தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024 ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி மற்றும் 2025 பெப்ரவரி மாதம் முதலாம் திகதிகளில் சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களைத் தவிர புதிய வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக கூறினார்.

மேலும் 2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து ஆரம்ப நடவடிக்கைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு முடித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version