சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும், தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகள் இன்று (15) அந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மட்டுமே இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அலுவலகம் திறந்திருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக, பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மாகாண அலுவலகங்கள் பிற்பகல் 12.30 வரை திறந்திருக்கும்.

இதற்கிடையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் http://www.drp.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் தொடர்புடைய கடிதத்தை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version