வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17.03) ஆரம்பமாகவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளதுடன், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தபால் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று தொடங்கும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், வேட்பாளர்களிடம் கோரியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version