பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை..!

சட்டவிரோத நில விற்பனை வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு மஹர நீதவான் நீதிமன்றத்தினால் வௌிநாட்டு பயணத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க நீதிமன்றம் பயணத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது

அதேவேளை குறித்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, மார்ச் 24 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version