புத்தளத்தில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் பலி

புத்தளம் – வென்னப்புவ வைக்கல பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு (18.03) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தெற்கு வைக்கல பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே உயிரிழந்தார்.

காதல் உறவு காரணமாக ஏற்பட்ட குடும்ப தகராறில் இந்த கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றத்துடன் தொடர்புடைய மாரவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version