முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இந்நிலையில் இதற்கான பிணை உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.