மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையைத் தீர்மானிக்கும் விலை சூத்திரம், அதிகபட்ச விற்பனை விலையைத் தீர்மானிக்கும் பொறிமுறை என்பவற்றை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானியை சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார்.

புதிய ஒழுங்குமுறையின் கீழ், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆண்டுக்கு இரண்டு முறை அதிகபட்ச சில்லறை விலையை திருத்துவதற்கு அதிகாரம் பெற்றுள்ளது.

பொதுமக்களின் நலனுக்காக, குறிப்பாக டொலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் செலவுகளை பாதித்தால், எந்த நேரத்திலும் இந்த விலைகளை சரிசெய்ய தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version