பிரதமர் மோடியின் வருகை குறித்த தகவல்களை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரிடையே இருதரப்பு
கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் அநுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு நடத்தவும், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் பலரும்
இந்த விஜயத்தில் கலந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version