தொடங்கொட- களனிகம அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம நோக்கி செல்லும் வழியில் 25.5 கிலோமீட்டர் தூரத்தில் பாரிய விபத்தொன்று பதிவாகியுள்ளது.
இதில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றும், வெளிநாட்டினரை ஏற்றிச் சென்ற சொகுசு வேன் ஒன்றும் அடுத்தடுத்து அதன் பின்னால் வான் மற்றும் கார் ஒன்றும் மோதி சேதமடைந்துள்ளது.