ஜப்பான் எதிர்காலத்தில் ஒரு பாரிய நிலநடுக்கத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசாங்க அறிக்கைகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 9 வரை பதிவாகக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்பு இருப்பதாக ஜப்பானிய அரசாங்க அறிக்கைகள் தெரிவித்துள்ளதுடன்,
இதனால் 300,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானிய பொருளாதாரம் சுமார் 2 டிரில்லியன் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் இதனுடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.