இன்று (01.04) முதல் அமுலாகும் வகையில் முட்டை விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 18% VAT வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
VAT வரி அமல்படுத்தப்பட்டாலும், முட்டை விலையில் எந்த அதிகரிப்பும் ஏற்படாது என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் முட்டைகள் மீது VAT வரியை அமல்படுத்துவது நியாயமற்றது என்றும், அது அவர்களின் தொழில்துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அச்சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது சந்தையில் முட்டை ஒன்று சுமார் 30 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.