வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் TIN கட்டாயம்

மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்காகவும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN)கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் மோட்டார் வாகனம் தொடர்பிலான அனைத்து சேவைகளுக்காகவும் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் கட்டாயமாக வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகனங்களைப் பதிவு செய்வதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும்
முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், உழவு வண்டி போன்றவற்றிற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version