மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

அம்பாறையில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01.04) சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (31.03) மாலை நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் காணாமற் போயிருந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி நேற்று (01.04) காலை இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, காணாமற்போன மீனவரின் நண்பரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, காணாமற் போன மீனவரின் சடலம் நேற்று நண்பகல் நேரத்தில் மீட்கப்பட்டது.

கல்முனை – பாண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காணாமற்போன நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version