வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
வவுனியா, ஓவியா விருந்தினர் விடுதியில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.மயூரதன் தலைமையில் இன்று புதன்கிழமை (02.04) கூட்டம் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வடக்கு – கிழக்கு பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான முதலாவது கூட்டம் இதுவாகும்.