இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான பதாதைகளில் அரச கரும மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக
அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான பதாதைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில், ஆங்கில மொழியிலும் சிங்கள மொழியிலும் மாத்திரமே இலங்கை அரசாங்கத்தால் பிரதமர் மோடிக்கான
வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இலங்கை அரசாங்கத்தால் அரச கரும மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
