பபுவா நியூகினியாவில், இன்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் பபுவா நியூகினியான் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில் 33 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுபட்டிருந்த போதிலும் பின்னர் அது மீள்பெறப்பட்டுள்ளது.