கொழும்பு விபுலானந்த கல்லூரி மற்றும் கங்காரு கிரிக்கெட் அக்கடமி (KCA ) அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றது. இதில் முதல் இன்னிங்ஸ் முன்னணியினால் விபுலானந்தா கல்லூரி அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய KCA 38 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பிரவிக் 37 ஓட்டங்களையும், விதுர்சன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். விபுலானந்த அணியின் பந்துவீச்சில் நிலுக்ஸன் 5 விக்கெட்களையும், விஷால் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். பதிலுக்கு துப்பாடிய விபுலானந்த கல்லூரி அணி 6 விக்கெட்ளை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் விதுர்சன் 57 ஓட்டங்களையும், தக்சயன் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர். KCA பந்துவீச்சில் பவிஷான் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
KCA அணி இரண்டாம் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற்றுக்கொண்டது. கபி ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், சுவஸ்தி ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.