தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக சமர்ப்பிக்கலாம்

2024 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை இன்று (09.04) முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக சமர்ப்பிக்க முடியும்.

அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான வழிமுறைகளை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.moe.gov.lk இல் பெறலாம்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version