மன்னார் குஞ்சுக்குளம் அருவியாரு சுற்றுலா வலயம் திறந்து வைப்பு

மடு பிரதேச   செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட ‘அருவி ஆறு சுற்றுலா வலயம்’ நேற்று (08.04) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்   திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் பத்திநாதன் மற்றும் வடமாகாண சுற்றுலாத்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், நானாட்டான் பிரதேச சபை செயலாளர் மற்றும் அழைக்கப்பட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது அருவியாறு சுற்றுலா வலய பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன்
தொங்கு பாலமும் திறந்து வைக்கப்பட்டது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இப்பகுதிக்கு வருகை தருவதனால் அவர்களின் நலனை கருத்திற் கொண்டு இச் சுற்றுலா மையம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version