‘விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்’ – சஜித்

திரவ உரக் கேன் வெடிப்பு சம்பவத்தின் மூலம் நாட்டின் விவசாயிகளை ஏமாற்றும் செயற்பாடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (12/12) அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உழவு செய்ய சுமார் இருநூறு கேன் திரவ உரத்தை விவசாயத் திணைக்களம் தனது விவசாயிகள் அமைப்பிற்கு வழங்கியுள்ளது, தற்போது இவற்றில் 100 கேன்கள் வெடித்துள்ளதுடன், திரவ உரம் வீணாக்கப்பட்டுள்ளதாக ஹொரோவிப்பொத்தான விவசாயிகள் அமைப்பு தெரிவிக்கிறது.

அதுமட்டுமல்ல, உரகேன் வெடித்த சம்பவங்கள் நாடு முழுவதும் பரப்பப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தைப் பற்றி எந்தவொரு தர உறுதியும், நம்பகத்தன்மையும் மற்றும் பாதுகாப்பு ஆகியவைகளையும் கருத்தில் கொள்ளாது வழங்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

வரலாற்றில் எந்த காலத்திலும் இந்த மாதிரியான துரதிர்ஷ;டவசமான தலையெழுத்தை, நாட்டை ஆண்ட எந்த ஆட்சியாளர்களும் ஏற்படுத்தியதில்லை. அரசின் இந்த அரிய செயலும் பொறுப்பற்ற முடிவும் ஒருபுறம் விவசாயிகளின் தலைமுறையையும் மறுபுறம் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்க முடியாத அளவுக்கு செய்துவிட்டன என சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version