மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருளைப் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.