பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் பலி

கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சுமார் 100 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமற்போன ஏனைய நபர்களை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொங்கோ குடியரசின் Bolomba பிராந்தியத்தை நோக்கி 400 பேருடன் பயணித்த படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version