இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி நேற்று(17.04) அறிவிக்கப்பட்டது. இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் 19 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியோடு 26 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை ஆறு இளையோர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு தமிழ் வீரர்களும், கண்டியை சேர்ந்த ஒரு முஸ்லிம் வீரரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த, யாழ் பரி யோவான் கல்லூரி வீரர் குகதாஸ் மாதுளன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ள அதேவேளை, யாழ் ஹார்ட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் கண்டி திரித்துவக் கல்லூரி வீரர் ஆதாம் ஹில்மி அணியில் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அணி விபரம்
- விமத் தின்சரா – (தலைவர்) ரோயல் கல்லூரி, கொழும்பு
- துல்னித் சிகேரா – மஹாநாம கல்லூரி, கொழும்பு
- டிமந்த மகாவிதான – திரித்துவக் கல்லூரி, கண்டி
- விரான் சமுதித – புனித சர்வேசியஸ் கல்லூரி, மாத்தறை
- கவிஜா கமகே – கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி
- கித்மா விதானபத்திரன – ஆனந்த கல்லூரி, கொழும்பு
- ரமிரு பெரேரா – ரோயல் கல்லூரி, கொழும்பு
- ஆதம் ஹில்மி – டிரினிட்டி கல்லூரி, கண்டி
- தினுர தம்சித் – குருகுல கல்லூரி, களனி
- சாமிக்க ஹீனடிகல – மஹாநாம கல்லூரி, கொழும்பு
- ரசித் நிம்சரா – லைசியம் சர்வதேச பாடசாலை, வத்தளை
- குகதாஸ் மாதுலன் – புனித ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்
- விக்னேஸ்வரன் ஆகாஷ் – ஹார்ட்லி கல்லூரி, யாழ்ப்பாணம்
- தருஷா நவோத்யா – சாஹிரா கல்லூரி, கொழும்பு
- சனுஜா நிந்துவர – செயின்ட் ஆன்ஸ் கல்லூரி, குருநாகல