காஷ்மீரில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை

இந்தியா, காஷ்மீர் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது மேற்கொள்ளபப்ட்ட திறந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக 20 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுளளதாகவும், பலர் காயமடைந்துள்ளதுகாவும், சிலர் கவலைக்கிடமான நிலையில் காணப்படுவதாகவும் பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் பிந்தி கிடைத்த தகவல்களின் படி 28 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகம் டைம்ஸ் ஒப் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று(22.04) காஷ்மீரின் அதிக சுற்றுலாபபயணிகள் வருகை தரும், ஹிமாலய பகுதிக்குக்கு அண்மித்த பஹல்கம் பகுதியிலேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த பகுதி குட்டி சுவிற்சலாந்து என அழைக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதி மற்றும் காஷ்மீர் பகுதிகளில் சுற்றுப்பயணிகளை குறித்திவைத்து தாக்குதல்கள் நடாத்தப்படவில்லை எனவும் இதுவே முதற் தடவை எனவும் பி.பி.சி சுட்டிக்காட்டியுள்ளது. தாக்குதல் நடாத்தப்பட்ட இடம் மலைப் பகுதி எனவும், அந்த இடத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாது எனவும், காயடைந்தவர்களை மீட்கும் பணிகளுக்காக இராணுவம், மற்றும் பொலிஸார் அனுப்பப்பட்டு வைத்தியசலைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தை நேரடியாக பார்வையிட்டவர்கள், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் தனி நபர் எனவும், அவர் இஸ்லாமியர் அல்ல எனவும் தெரிவித்துள்ளனர். ISS அமைப்புடன் தொடர்புடைய லக்சர் இ தலிபா அமைப்பின் ஒரு பிரிவு இந்த தாக்குதலுக்கான உரிமையை கோரியுள்ளது. அத்தோடு இறந்தவர் ஒருவரின் மனைவி “போய் இந்த சம்பவத்தை மோடிக்கு சொல்லு” என துப்பாக்கி சூடு நடாத்தியவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள அதேவேளை, உடனடியாக நாடு திரும்பவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு சென்றுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஸ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உள்ளிடட பலர் தமது கண்டங்களை வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமிய அமைப்புகளின் தீவிரவாதம் தொடர்பில் இந்திய பிரதமர் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடாத்திய நிலையிலும், அமெரிக்காவின் உப ஜனாதிபதி இந்தியாவுக்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version