காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம். நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம் என்று அதிரடியாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் காயமடநை்தனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன.
இந்த தாக்குதலுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உட்பட பல உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
விரைவில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் இராணுவ வீரர்களை தயாராக வைத்துள்ளது. கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கி உள்ளது.
பாகிஸ்தான் கராச்சியில் ஏவுகணை பயிற்சியை தொடங்கி உள்ளது. இதனிடையே தான் இன்று ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
எவ்வாறாயினும் உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.