தெற்கு காசா பகுதியில் உள்ள உதவி விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் 51க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா பகுதியில் உள்ள உதவி விநியோக மையங்களுக்கு அருகில் தினமும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாவு விநியோகிக்கப்படும் மற்றொரு இடத்தில் இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணை தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.