இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (25.06) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பித்து. இன்று மூன்றாவது நாள் நிறைவுக்கு வந்துள்ளது. மழையின் பாதிப்புகளின்றி நடைபெற்ற இன்றைய நாள் ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்தது. பங்களாதேஷ் அணி 6 விக்கெட்களை இழந்தது. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதக தனமையினை வழங்க ஆரம்பித்துள்ளது. இதனால் நாளைய நான்காம் நாளில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை இலகுவாக வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்றைய மூன்றாம் நாள் நிறைவில் பங்களாதேஷ் அணி இரண்டாம் இன்னிங்சில் 33 ஓவர்களில் 06 விக்கெட்ளை இழந்து 115 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணியிலும் பார்க்க 96 ஓட்டங்கள் பின்னிலையில் பங்களாதேஷ் அணி காணப்படுகிறது.
இன்றைய நாள் துடுப்பாட்டத்தில் இலங்கை அணிக்கு சரியானதாக அமையவில்லை. இலங்கை அணி 116.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 458 ஓட்டங்களை பெற்றளது. பங்களாதேஷ் அணியிலும் பார்க்க 211 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
156 ஓட்டங்களை பெற்ற நிலையில் பத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 7 ஓட்டங்களோடு அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழந்தார். 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. காலை முதல் மதியசபோனம் வரை 4 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. மதிய போசனத்துக்கு பின்னரும் தொடர்ச்சியாக விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதல் நாளில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தி 8 விக்கெட்ளை கைப்பற்றிய நிலையில் இரண்டாம் நாள் ஆரம்பித்து சிறிது நேரத்துக்குகள் மிகுதி இரண்டு விக்கெட்களும் வீழத்தப்பட்டன. அதன் பின்னர் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி வேகமாகவும், சிறப்பாகவும் துடுப்பாடி இரண்டாம் நாளில் துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. மூன்றாம் நாளில் பங்களாதேஷ் அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி இலங்கை அணியை எதிர்பாத்த ஓட்ட எண்ணிக்கையிலும் குறைவாக ஆட்டமிழக்க செய்துள்ளது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு உதார 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 88 ஓட்டங்கள். பத்தும் நிஸ்ஸங்க அவரின் நான்காவது சததத்தை நேற்று பூர்த்தி செய்தார். இன்று 150 ஓட்டங்களை பூர்த்தி செய்தார். இது இவரின் இரண்டாவது 150 ஓட்ட பெறுதியாகும். பங்களாதேஷ் அணியுடனான முதற் போட்டியில் நிஸ்ஸங்க 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். டினேஷ் சந்திமால் வேகமாக அடித்தாடி ஓட்டங்களை ஆரம்பத்தில் குவித்தார். இரண்டாம் நாள் நிறைவடைவதற்கு சற்று முன்னர் 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சந்திமால் தனது 17 ஆவது சதத்தை பூர்த்தி செய்ய முடியாமல் தவறவிட்டுளார். இருவரது இணைப்பாட்டம் 196 ஓட்டங்கள் ஆகும். இறுதி நேரத்தில் தனித்து நின்று போராடிய குஷல் மென்டிஸ் 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவரின் துடுப்பாட்டம் இலங்கை அணியின் ஓட்ட முன்னேற்றத்துக்கு பெரிதும் கைகொடுத்தது. இருப்பினும் துரதிஷ்ட வசமாக அவர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இரவு காப்பாளராக துடுப்பாட களமிறங்கிய பிரபாத் ஜயசூரியா 39 பந்துகளில் 10 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். கமிந்து மென்டிஸ் வேகமான ஆரம்பத்தை மேற்கொண்டு பின்னர் நெதுவான துடுப்பாட்டத்தை மேற்கொண்டு 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். குஷல் மென்டிஸ் வேகமாக அடித்தாடி 42 ஓட்டங்களை பெற்றுள்ளார். சொனால் டினுஷ 11 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் டைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். நயீம் ஹசன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பங்களாதேஷ் அணி 79.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 247 ஓட்டங்களை பெற்றது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷட்மன் இஸ்லாம் 46 ஓட்டங்களை பெற்றார். மொமினுல் ஹக் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த நஜ்முல் ஹொசைன் சான்டோ 8 ஓட்டங்க்ளுடன் ஆட்டமிழந்தார். முஸ்பிகீர் ரஹீம், லிட்டன் டாஸ் 67 ஓட்டங்களை பகிர்ந்தனர். டாஸ் 34 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ரஹீம் 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மெஹ்தி ஹசன் மிராஸ் 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சொனால் டினுஷ்க, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார். விஸ்வ பெர்னாண்டோ இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள். இலங்கை அணியின் களத்தடுப்பு கடந்த போட்டியிலும் சிறப்பாக அமையவில்லை. இந்த போட்டியிலும் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னமும் முன்னேற்றம் காணவேண்டும்.
அணி விபரம்
இலங்கை
பத்தும் நிஸ்ஸங்க, லஹிரு உதார, டினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, கமிந்து மென்டிஸ், குஷல் மென்டிஸ், சொனால் டினுஷ, பிரபாத் ஜெயசூர்யா, அசித்த பெர்னாண்டோ, விஸ்வ பெர்னாண்டோ, தரிந்து ரத்நாயக்க,
பங்களாதேஷ்
ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக், மொமினுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், எபாடோட் ஹொசைன், டைஜூல் இஸ்லாம், நஹிட் ராணா, ஹசன் மஹ்மூட்