அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் விடுவிக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (12.09) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரத்தன தேரரை தலா 500,000 ரூபாய் இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

2020 பொதுத் தேர்தலில் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக, அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளர் வேதனிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி அச்சுறுத்தியதாக ரத்தன தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version