பயிர்க் காப்புறுதி தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல்!

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பயிர்க்காப்புறுதி தொடர்பாக விவசாய துறைசார் உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.09) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கருத்துதெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த மாதம் நடைபெற்ற விவசாய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய விவசாய காப்புறுதி தொடர்பாக இன்றைய தினம் அத்துறைசார் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.மேலும், எமது மாவட்ட பொதுமக்களின் பொருளாதார நடவடிக்கைகள் பெரும்பாலும் விவசாய துறை சார்ந்ததாக இருப்பதனால் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் விவசாயிகளின் நலன்சார்ந்ததாக செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், விவசாயிகளுக்கு பயிர்க் காப்புறுதி தொடர்பாக சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு விவசாய போதனாசிரியர்களுக்கு உள்ளதாகவும் அவர்களுடன் இணைந்த வகையில் கிராம மட்டத்தில் கடமையாற்றும் பெரும்பாக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பயிர்க் காப்புறுதி தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்கள மாவட்ட பிரதிப் பணிப்பாளர், விவசாயக் காப்புறுதி சபையின் யாழ் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,விவசாய போதனாசிரியர்கள், மற்றும் விவசாயத்துறைசார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்தாக யாழ் மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version