இந்தியா–பாகிஸ்தான் போட்டி புறக்கணிப்பு: PCBயிடம் விளக்கம் கேட்ட ICC

2026 T20 உலகக் கிண்ணத்தில் பெப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள இந்தியா–பாகிஸ்தான் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கான Force Majeure (அசாதாரண சூழ்நிலை) விதியை பயன்படுத்திய காரணங்களை விரிவாக விளக்குமாறு ICC கேட்டுள்ளது.
அரசின் உத்தரவு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக PCB, ICCக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளதாக cricinfo செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு முதலில் X தளத்தில் போட்டியில் பங்கேற்கமாட்டோம் என அறிவித்ததுடன், பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் இதனை அமைச்சரவையிலும் உறுதிப்படுத்தினார். பங்களாதேஷ் அணியை போட்டியிலிருந்து நீக்கியதற்கான எதிர்ப்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ICC உறுப்பினர் பங்கேற்பு ஒப்பந்தத்தின் (MPA) படி, Force Majeure பயன்படுத்தும் போது அந்தச் சூழ்நிலையை குறைப்பதற்காக PCB எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதையும் ICC கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், போட்டியை புறக்கணித்தால் ஏற்படும் விளையாட்டு, வணிக மற்றும் நிர்வாக விளைவுகளையும் ICC சுட்டிக்காட்டியுள்ளது.

போட்டி புறக்கணிப்பு தொடர்ந்தால், ICCக்கு ஏற்படும் நிதி இழப்புகளுக்கான இழப்பீட்டை கோர முடியும் என்றும், கடுமையான விதிமீறல் ஏற்பட்டால் PCB உறுப்பினர் உரிமையை இடைநிறுத்தும் அதிகாரம் ICCக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உலகளாவிய நிர்வாகக் குழு கோரக்கூடிய சாத்தியமான இழப்புகளை ICC ., PCB யிடம் சுட்டிக்காட்டியுள்ளது. மோதலைத் தவிர்ப்பதில் தான் ஆர்வமாக இருப்பதாக ஐ.சி.சி., பிசிபியிடம் தெரிவித்துள்ளது, ஆனால் ICC விதிமுறைகளின் படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை இடைநீக்கம் மற்றும் உறுப்பினர் பதவி நீக்கம் போன்ற தீவிர நடவடிக்கையை செயற்படுத்த அனுமதிக்கிறது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விஷயம் சர்ச்சைக்குரியதாக மாறினால், அதற்கு வலுவான காரணம் இருப்பதாக பாகிஸ்தான் நம்பிக்கை உள்ளது. PCB – இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு சபை இடையே ஒரு பழைய தகராறு இருப்பதாகவும் அதனை சான்றாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எடுத்துக்கொள்ளும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நம்புவதாக உள்ளக தகல்வல்கள் வெளியாகியுள்ளன. 2015 மற்றும் 2023 க்கு இடையில் ஆறு இருதரப்பு தொடர்களை விளையாட இரு கிரிக்கெட் சபைகளும் 2014 ஆம் ஆண்டு கையெழுத்திட்ட போதும் இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என கூறி ஒப்பந்தத்தை BCCI மீறியதாகவும், பிசிபி இழப்பீடு அதற்கான இழப்பீட்டை வழங்கவில்லை எனவும் அந்த விடயத்தை மீள பாகிஸ்தான் கையில் எடுக்குமெனவும் சொல்லப்படுகிறது.

ICC மற்றும் PCB இடையே தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை இரு தரப்பும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version