எரிவாயு தட்டுப்பாட்டிற்கு உடனடி தீரவ்வு வேண்டும் – சஜித் பிரேமதாச

பல நாட்களாக நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால், நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு வரிசைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (19.02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எரிவாயு கிடைக்காமல் போவது நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறும் விடயமாகும். இது உயிர்வாழும் உரிமையைக் கூடப் பாதுகாப்பதுடன் தொடர்புடையதாக அமைந்து காணப்படுவதனால், இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, உடனடி தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களைப் பெறுவதும் தவறல்ல என்றும், இந்த எரிவாயு வரிசையை எதிர்க்கட்சி தோற்றுவிக்கவில்லை என்றும், தற்சமயம் தட்டுப்பாடு நிலவுவதால், தயவுசெய்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நுகர்வோர் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version