பாலைதீவு படகு விபத்து – இருவர் பலி!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவுக்குப் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று இன்று (06.02) காலை கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சிலர் நீரில் மூழ்கிய நிலையில் அவசர மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், சம்பவம் இடம்பெற்ற உடனடியாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version