இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரலாம் என காலநிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் மனிதர்களுக்கு உணரப்படும் வெப்பமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிக உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடல்நலத்தை கவனித்து அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாடசலை மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (06.02) அதிகபட்ச வெப்பநிலை ரத்னபுரத்தில் 36.4°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் 8.1°C ஆகவும் பதிவாகியுள்ளது.