கேகாலை, மொல்கொட பகுதியில் விபத்து -ஒருவர் பலி

கேகாலை, மொல்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 54 வயதுடைய மொல்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலை–கொழும்பு பிரதான வீதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து, சாலையை கடக்க முயன்ற குறித்த நபர் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த பாதசாரி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version