வவுனியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளைய தினம் (10.09) ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கின்றன.
நாளைய தினம் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளன. ஆசிரியர்கள் கிராமசேவையாளரிடம் அத்தாட்ச்சிப்படுத்திய விண்ணப்ப படிவத்தை எடுத்து சென்று காலை 8 மணி முதல் 2 மணி வரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முடியும்.
மூன்று நாட்களுக்கு ஆசிரியர்களுக்கன தடுப்பூசிகள் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் ஏற்றப்பபடவுள்ளன. பாடசாலைகளுக்கென தனி தனியாக நேரம் ஒதுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் இந்த தகவல்களை வி தமிழ் இணையத்துக்கு பிரதியோகோமக வழங்கியுள்ளார்.
ஆசிரியர்கள் தங்கள் கிராமசேவையாளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். கட்டாயம் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலையத்தில்தான் ஊசிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றில்லை என ஏற்கனவே சுகாதர பிரிவு அறிவித்துள்ளது.
அந்தந்த கிராம சேவையாளர் மற்றும் வைத்திய அதிகாரி பணிமனையினை தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
எமது வி தமிழ் இணையத்துக்கு கிடைக்கும் தகவல்களின் அடிபபடையிலேயே தகவல்களை வெளியிடுகிறோம். நூறு வீத சரியான தகவல்களை கிராமசேவையாளர் அல்லது வவுனியா பிராந்திய சுகாதார பணிமனை, அல்லது தங்களுக்குரிய சுகாதர வைத்திய அதிகாரி பணிமனையிடம் பெற்றுக்கொள்ளலாம்.
