இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இத்தாலி நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவரது மனைவி மற்றும் வெளிவிகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியவர்கள் இந்த பயணத்தில் பிரதமரோடு சென்றுள்ளனர்.
இவ்விஜயத்தின்போது கௌரவ பிரதமர் ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றவுள்ளதுடன், இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
