இலங்கையில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடித்திருப்பதாக கொவிட் செயலணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் தனிமைப்படுத்தல் காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவைடைந்து வரும் நிலையில், இறப்புகள் குறைவாடைந்து வரும் நிலையிலிலும் ஊரடங்கு தொடரும் பட்சத்தில் இன்னமும் தொற்றையும், இறப்புகளையும் குறைக்கமுடியும் என்ற காரணத்தினாலும் இந்த முடிவு எடுக்கபப்ட்டுள்ளது.
கொரோனா திரிபு வைரஸ் பரவல் அதிகரித்த வருகின்றமையும் இந்த முடக்கம் நீடிப்பதற்கு முக்கியமான காரணம். ஒக்டோபர் முதல் வாரம் வரையில் முடக்கம் செய்தால் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொரோனோவை கொண்டுவரமுடியும் என சுகாதர துறை கூறிவரும் நிலையில் இந்த முடக்கம் நீடிக்கப்பட்டுளள்து.
தொற்றையும், இறப்புகளையும் குறைக்க மக்களே கட்டுப்பாடாக செயற்படவேண்டும். இல்லாவிட்டால் தொற்று இலகுவில் குறைவடையது. அநாவசியமாக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்தால் வேகமாக தொற்றை கட்டுப்படுத்தமுடியும்.