அநுராதபுரம் – ஹொரவிபொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாகத்திபொத்தான பகுதியில் ஜஸ் போதை மாத்திரைகள் மற்றும் ஹொரோயின் போதைப் பொருள்களை உடன் வைத்திருந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (23/12) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய உபதிஸ்ஸகே திஸ்ஸ குமாரசிங்க எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவிபொத்தான பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேகநபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து ஜஸ் 300 மில்லிகிராம், ஹொரோயின் 50 மில்லிகிராம் மற்றும் போதை மாத்திரை என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹொரவிபொத்தான பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(திருகோணமலை நிருபர்)