இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதற் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டி இலங்கை அணிக்கு மிக முக்கியமானதாக அமையவுள்ளது.
முழு பலத்துடன் விளையாடும் தென்னாபிரிக்கா அணியினை இலங்கை அணி வெல்வது இலகுவானதல்ல.முதற் போட்டியில் துடுப்பாட்டத்தில் சறுக்கிய இலங்கை அணி இந்தப் போட்டியில் தனது துடுப்பாட்டத்தை சீர் செய்ய வேண்டும்.
மூன்றாமிடம் இலங்கை அணிக்கு சிக்கலாக உள்ளது. குசல் பெரேரா இன்றைய போட்டியில் விளையாடுவதும் சந்தேகமான நிலையில் பானுக ராஜபக்சவிற்கு பதிலாக கமிந்து மென்டிசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
துடுப்பாட்ட வரிசையினை இலங்கை அணி சீர் செய்யவேண்டும். தொடர்ச்சியாக ஓட்டங்களை பெற்று வரும் சமிக்க கருணாரட்ன மத்திய வரிசையில் துடுப்பாடுவது இலங்கை அணிக்கு ஓட்டங்களை பெறக்கூடிய வாய்ப்பை தரலாம். இலங்கை அணி மீதமுள்ள இரு போட்டிகளிலும் அணியினை சீராக தயார் செய்து கொண்டாலே உலக கிண்ண தொடரில் பலமான அணியாக களமிறங்கலாம்.
வீடியோ இணைப்பு