பாடசாலைகள் நவம்பரில் ஆரம்பம்?

இலங்கையில்,பாடசாலைகளை நவம்பரில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 100 மாணவர்களிலும் குறைவானோர் காணப்படும் 3000க்கும் அதிகமான பாடசாலைகள் கிராமங்களில் வியாபித்திருக்கின்றன.

அதனால் அவ்வாறான பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் காணப்படும் இயலுமை தொடர்பில் உடனடிப் பரிந்துரைகளை முன்வைக்கும் பொறுப்பு சுகாதார மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளடங்களான தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையால் சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கான முதல்நிலைக் கல்வியும் அவ்வாறான மாணவர்களுக்கு குழந்தைப் பருவக் கல்வியும் இழக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி தலைமையில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் திட்டம் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் 12-18 வயதானவர்களுக்கு தடுப்பூசிகள் நவம்பர் மாதத்துக்குள் ஏற்றப்படும் சாத்தியம் இருக்கின்றனவா அலல்து தடுப்பூசி ஏற்றாமல் பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டம் போடப்படுகிறதா என்ற விடயங்கள் தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியிடபடவில்லை.

நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்களின் படி நகர்புர பாடசாலைகள் நவம்பர் மாதமளவில் ஆரம்பிப்பது சந்தகேம் போலவே தென்படுகிறது.

பாடசாலைகள் நவம்பரில் ஆரம்பம்?
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version