வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்துக்கு நாளையத்தினம் மேலும் 35,000 சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக சேரவுள்ளதாக வவுனியா மாவட்ட தொற்றுயியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் அவரிடம் வி தமிழ் தொடர்பு கொண்டு கேட்ட போதே இதனை தெரிவித்தார். தற்போது கையிருப்பிலுள்ள ஊசிகள் அரச அலுவலகர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதலாம், இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
அத்தோடு எதிர்வரும் தினங்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் வழங்கும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்திய கலாநிதி செ.லவன் தெரிவித்தார்.
