தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி நேற்று (06/01) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.
தன்னை கைது செய்து, சுமார் 9 மாத காலம் தடுத்து வைத்திருந்தமையினால், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறும் அவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.