சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வருகையை தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று (09/01) திறக்கப்படவுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 18 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் நேற்று (08/01) உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தனர்.
இலங்கை – சீனாவின் 65 வருடகால இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அவரது விஜயம் அமைந்துள்ளது.
இந்நிலையில், கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதியான நடைப்பாதை திறப்பு விழா இன்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தலைமையில் இடம்பெறவுள்ளது.
