இவ்வருடம் ஜனவரி முதல் வாரத்தில் சுமார் 16,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மீட்பது மற்றும் தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாப்பது என்ற இரட்டை சவாலை அரசாங்கம் எதிர்கொள்ளும் நிலையில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காக விமான நிலையத்தில் 24 மணித்தியால தடுப்பூசி மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அந்நிய செலாவணி நெருக்கடியை நிலையை சமாளிப்பதற்கு மாதாந்தம் 15,000 சுற்றுலாப் பயணிகளையாவது வருகைத்தர செய்ய வேண்டுமென தெரிவித்தார்.